முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 628

ஆசைகள் அற்றுப் போகும்படி

Updated On : 12 ஆகஸ்ட், 2017 at 9:18 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:08 PM

சிதம்பரத்துக்கு அருகிலுள்ள திருவேட்களம் என்னும் தலத்துக்கான இப்பாடல் ஆசைகள் அற்றுப் போகும்படி வேண்டுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில் எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று எழுத்துகளே பயின்றாலும் இவற்றில் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிகின்றது.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில்களுமாக அமைந்திருக்கின்றன.

தாத்தன தானன தாத்தன தானன
      தாத்தன தானன தனதான

Advertisement

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
         வாழ்க்கையை நீடென மதியாமல்

மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
         மாப்பரி வேயெய்தி அநுபோக

பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
         பாற்படு ஆடக  மதுதேடப்

பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
         பாற்கட லானென வுழல்வேனோ

சாத்திர மாறையு நீத்தம னோலய
         சாத்தியர் மேவிய பதவேளே

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
         தாட்பர னார்தரு குமரேசா

வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
         மீக்கமு தாமயில் மணவாளா

வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
         வேட்கள மேவிய பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.