முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 634

திருப்படிக்கரை என்னும் தலத்துக்கானது

Updated On : 18 ஆகஸ்ட், 2017 at 9:47 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:11 PM

திருப்புகழை உரைக்க வேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் திருப்படிக்கரை என்னும் தலத்துக்கானது.  திருமண்ணிப்படிக்கரை என்றும் இலுப்பைப்பட்டு என்றும் வழங்கப்படும் இத்தலம் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.  (‘அருக்கி மெத்தன’ என்று தொடங்கும் இரண்டு பாடல்களில் இது இரண்டாவது.  முதற்பாடலை நம் 388ம் தவணையில் பார்த்தோம்.ஸ்ரீ

முற்றிலும் வல்லொற்றுகளாலும் குற்றெழுத்துகளாலும் அமைந்த இப்பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள் உள்ளன.  ஒவ்வொரு சீரிலும் மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும் அவற்றுள் வேறுபாடு இருக்கிறது.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் மூன்று குறில், ஒரு வல்லொற்று என்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் மூன்று குறில் இரண்டு வல்லொற்று என்றும் அமைந்துள்ளன.

தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
      தனத்த தத்தனத் தனதான

Advertisement

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
         டழைத்தி தப்படச் சிலகூறி

அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
         தணைத்தி தழ்க்கொடுத் தனுராகத்

துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
         குளக்க ருத்தினிற் ப்ரமைகூரா

துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
         துனைத்தி ருப்புகழ் பகர்வேனோ

தருக்க மற்கடப் படைப்ப லத்தினிற்
         றடப்பொ ருப்பெடுத் தணையாகச்

சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
         றரித்த ரக்கர்பொட் டெழவேபோர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
         செயித்த வுத்தமத் திருமாமன்

திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
         திருப்ப டிக்கரைப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.