பகுதி - 641
நாதமாகவும் ஓசையாகவும் விளங்குபவனே!
பதச் சேதம் | சொற் பொருள் |
நீதம் துவம் ஆகி Advertisement | நீதம்: நீதி, நீதியிலே; துவம் ஆகி: நிலைபெற்று; |
நேம துணையாகி
| நேம: நியம, நல்லொழுக்க; |
பூத தயவான | பூத: உயிர்க் கூட்டங்களை; தயவான: அன்பு செலுத்தும்; |
போதை தருவாயே
| போது: மலர், மலர்ச்சி, (மலர்வதால் ஞானம்); |
நாதத்து ஒளியோனே |
|
ஞான கடலோனே
|
|
கோது அற்ற அமுதானே | கோது: குற்றம்; அமுதானே: அமுதம் போன்றவனே; |
கூடல் பெருமாளே.
| கூடல்: மதுரை; |
நீதத் துவமாகி... நீதியிலே நிலைபெற்றதாய்;
நேமத் துணையாகி... நல்லொழுக்கத்தை மேற்கொள்ளும் துணையாய்;
பூதத் தயவான... உயிர்க் கூட்டங்களின் மீது தயவோடு (கருணையோடு) விளங்குதாய் (இருக்கின்ற),
போதைத் தருவாயே... ஞானத்தைத் தந்தருள வேண்டும்.
நாதத் தொனியோனே... நாதமும் ஓசையுமாக விளங்குபவனே!
ஞானக் கடலோனே... ஞானக் கடலே!
கோதற்ற அமுதானே... மாசற்ற அமுதத்தைப் போன்றவனே!
கூடற் பெருமாளே.... நான்மாடக்கூடல் எனப்படும் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே!
சுருக்க உரை:
நாதமாகவும் ஓசையாகவும் விளங்குபவனே! ஞானக் கடலே! மாசற்ற அமுதத்தை ஒத்தவனே! மதுரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
நீதி நிலைபெற்றதாகவும்; நல்லொழுக்கத்தை மேற்கொள்வதற்கான துணையாகவும்; எல்லா உயிர்களின் மீதும் கருணை உள்ளதாகவும் விளங்குகின்ற ஞானத்தைத் தந்தருளவேண்டும்.