முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 642

ஆயிரம்கோடிப் பிறவிகள் ஒழிந்தே போகும்

Updated On : 26 ஆகஸ்ட், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:14 PM

இறைவனுடைய நாமத்தைச் சொன்னால் ஆயிரம்கோடிப் பிறவிகள் ஒழிந்தே போகும் அற்புதத்தைப் பாடும் இந்தப் பாடல் வெள்ளிகரம் தலத்துக்கானது.  இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது. 

இந்தச் சந்தம் சற்றே நீளமானது.  அடிக்கு ஒற்றொழித்து 35 எழுத்துகள் உள்ளன.  தொங்கல் சீரோடு சேர்த்து பதினோரு சீர்களைக் கொண்ட வண்ணவிருத்தம். முதல் நான்கு சீர்களைத் தவிர்த்து மற்ற எல்லாச் சீர்களும் தனித்தனியான அமைப்பைக் கொண்டவை. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் (இரண்டாவது எழுத்து நெடிலுடன் கூடிய) நான்கெழுத்துகளும்; ஆறாவது சீரில் (மூன்றாமிடத்தில் வல்லொற்றோடு கூடிய) மூன்றெழுத்துகளும்; ஏழாவது சீரில் ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு குறிலும்; எட்டாவது சீரில் இரண்டு நெடிலும் இரண்டு குறிலும்; ஒன்பதாவது சீரில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு மெல்லொற்றும்; பத்தாவது சீரில் ஒரு நெடிலுடன் கூடிய மூன்றெழுத்துகளும் உள்ளன.  சிக்கலான கணக்கு.  அருமையான வேலைப்பாடு.

தனன தனாதன தனன தனாதன தனன தனத்த தந்த
      தானாதன தானந் தானன தந்ததான

Advertisement

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
         வாராய்பதி காதங் காதரை யொன்றுமூரும்

வயலு மொரேவிடை யெனவொ ருகாவிடை வல்ல
         பமற்றழிந்து  மாலாய்மட லேறுங் காமுக எம்பிரானே

இதவி யகாணிவை ததையெ னவேடுவ னெய்தி டுமெச்சில்
         தின்று லீலாசல மாடுந் தூயவன் மைந்தநாளும்

இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள
        மெனக்கலந்து நூறாயிர பேதஞ் சாதமொ ழிந்தவாதான்

கதைக னசாபதி கிரிவ ளைவாளொடு கைவ சிவித்த நந்த
         கோபாலம கீபன் தேவிம கிழ்ந்துவாழக்

கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப்ப யந்து
         ஆகாய கபாலம் பீறநி மிர்ந்துநீள

விதர ணமாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்கநின்ற
         நாராயண மாமன் சேயைமு னிந்தகோவே

விளைவ யலூடிடை வளைவி ளையாடிய வெள்ளி
         நகர்க்கமர்ந்த வேலாயுத மேவுந் தேவர்கள் தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.