முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 644

செந்தமிழால் பாடித் தொண்டு செய்ய

Updated On : 28 ஆகஸ்ட், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:14 PM

செந்தமிழால் பாடித் தொண்டு செய்யக் கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளை உடைய பாடல்.  எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல இரண்டு குறில், ஒரு வல்லொற்று, ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு குறில், ஒரு மெல்லொற்று என்ற சீரான அமைப்பு பயில்கிறது.


தனத்தந்தந் தனத்தந்தந்
      தனத்தந்தந் தனத்தந்தந்
      தனத்தந்தந் தனத்தந்தந் தனதான

Advertisement

பெருக்கச்சஞ் சலித்துக்கந்
         தலுற்றுப்புந் தியற்றுப்பின்
         பிழைப்பற்றுங் குறைப்புற்றும் பொதுமாதர்

ப்ரியபட்டங் கழைத்துத்தங்
         கலைக்குட்டங் கிடப்பட்சம்
         பிணித்துத்தந் தனத்தைத்தந் தணையாதே

புரக்கைக்குன் பதத்தைத்தந்
         தெனக்குத்தொண் டுறப்பற்றும்
         புலத்துக்கண் செழிக்கச்செந் தமிழ்பாடும்

புலப்பட்டங் கொடுத்தற்கும்
         கருத்திற்கண் படக்கிட்டும்
         புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் புரிவாயே

தருக்கிக்கண் களிக்கத்தெண்
         டனிட்டுத்தண் புனத்திற்செங்
         குறத்திக்கன் புறச்சித்தந் தளர்வோனே

சலிப்புற்றங் குரத்திற்சம்
         ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
         சமர்த்திற்சங் கரிக்கத்தண் டியசூரன்

சிரத்தைச்சென் றறுத்துப்பந்
         தடித்துத்திண் குவட்டைக்கண்
         டிடித்துச்செந் திலிற்புக்கங் குறைவோனே

சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
         திருச்சிற்றம் பலத்தத்தந்
         செவிக்குப்பண் புறச்செப்பும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.