எந்த தொழில் வளர்ச்சிக்கும் சரிவர திட்டமிடுவது என்பது மிக முக்கியம். மேலும், வளர்ச்சித் திட்டங்களின் நல் விளைவுகள் கூடியமட்டில் மிகப் பரவலாக பொதுமக்களுக்குப் போய்ச் சேர உறுதி செய்ய வேண்டும் என்று துணை ராஷ்டிரபதி ஆர்.வெங்கட்ராமன் வலியுறுத்தினார்.
தற்போதைய திட்ட வளர்ச்சி வேகத்தை கட்டிக் காப்போமானால் 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்துக்கான உற்பத்தி இலக்குகளை அடைவது நிச்சயமாகச் சாத்தியப்படும் என்று தோன்றுகிறது.
தோட்ட விளைபொருள்கள் நம் நாட்டில் உள்ள மக்களுக்கு நியாயமான விலைகளில் கிடைக்க அத்தொழில் நடத்துவோர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
நமது வளங்களை உயர்பட்சமாகப் பயன்படுத்துவதுடன் உற்பத்திச் செலவைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தையும் உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் இதெல்லாம் சாத்தியம்.
தேசிய வளர்ச்சித் திட்ட முயற்சிகளில் பிற்பட்ட பகுதி மக்களும் பங்குகொண்டு பயன்பெற வைப்பது அனைவரின் கடமையாகும் என்று வெங்கட்ராமன் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.