இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (11.09.1985) - தமிழ்நாடு அரசு ஊழியருக்கு கூடுதல் கிராக்கிப்படி - அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 கோடி கூடுதல் செலவு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கிராக்கிப்படி அளிக்கப்படும். இம் மாதம் முதல் தேதியில் இருந்து இந்தக்  கூடுதல் கிராக்கிப்படி தரப்படும்.

ஆர்.மணவாளன்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கிராக்கிப்படி அளிக்கப்படும். இம் மாதம் முதல் தேதியில் இருந்து இந்தக்  கூடுதல் கிராக்கிப்படி தரப்படும்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதன்மூலம் சுமார் பத்து லட்சம் ஊழியர்கள் பயனடைவர்.

குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு எட்டு ரூபாயும், அதிகபட்சமாக முப்பது ரூபாயும் கிடைக்கும். அதாவது, குறைந்தபட்சமாக இதுவரை மாதம் 48 ரூபாய் அகவிலைப்படி வாங்கும் அரசு அலுவலர்கள் இனி 56 ரூபாய் பெறுவார்கள். அதிகபட்சமாக 180 ரூபாய் பெற்றுவந்த அரசு அலுவலர்கள் இனி 210 ரூபாய் அகவிலைப்படி பெறுவார்கள்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

நான்காவது ஊதியக் குழு ஏற்கெனவே அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்ததுபோக, ஆறு தவணை வரையில் அகவிலைப்படிகள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது வழங்கப்படுவது ஏழாவது தவணையாகும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர், அரசு மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு இந்தக் கூடுதல் அகவிலைப்படி கிடைக்கும்.

இதன்மூலம் அரசுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் செலவாகும். நடப்பு ஆண்டில் இதற்காக மட்டும் எட்டு கோடியே 17 லட்ச ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT