முகப்பு
கவிதைமணி

செல்லாக்காசு: கே. அசோகன்

Updated On : 21 நவம்பர், 2016 at 5:37 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:15 AM

ஓடியோடி சேர்த்த பணமெலாம்
வெற்று காகிதமாச்சுடி தங்கமே!
நாடிவந்து நன்மை செய்யுமென
நினைத்திருந்த வேளை தன்னில்
மோடியின் உருவத்திலே ஓரிரவில்
ஆடியே அடங்கிட்டதடி தங்கமே!

தேடியே நித்தம்நித்தம் அலைந்திட
துளிதங்கமும் கிடைக்கலே தங்கமே!

ஏழைப் பிள்ளை படிப்பதற்கே
என்றேனும் உதவினேனோ தங்கமே!
கூழுகுடித்து வாடும் ஏழைகள்
கம்பும் கேழ்வரகும் வாங்க கூட
ஏழுமலை ஏறுவதுபோல தினமும்
ஏறித்தான் திரிகின்றார் வங்கியிலே!

பாழாய் போன காசுதான் என்றே
புறந்தள்ள முடியலையே தங்கமே!
காசுமட்டும் இருந்திட்டா கணக்கா
கனவானா இருந்திடலாம் என்றேனே!

Advertisement

நேசம்பாசம்  உணர்வுகள் இன்றேதான்
நெஞ்சினிலே வந்ததே தங்கமே!
ஊசிப்போன வடைகள்கூட மறுநாளில்
ஊறவைத்த வடைகறியானதே தங்கமே!

பாசிமணி விற்கின்ற நரிக்குறவரிடமும்
பாசமாய் ஒட்டிக்கிட்டதடி தங்கமே!

அள்ளியள்ளி கொடுத்தாலும் மறுக்காது
அரவணைத்து கொள்வேன் தங்கமே!
கிள்ளியே கொடுப்பதற்கு எவரிடமும்
கிட்டத்தான் இல்லையே தங்கமே!

பள்ளியறை பஞ்சணையில் பதுங்கிய
பணங்களெலாம் செல்லா-காசாச்சு தங்கமே
அள்ளியள்ளி கொடுக்கதான் மனசு வந்தது
ஆரும் வாங்கவே ஆளில்லை தங்கமே!                                      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.