முகப்பு
கவிதைமணி

செல்லாக் காசு: இணுவையூர் வ-க-பரமநாதன்

Updated On : 21 நவம்பர், 2016 at 5:19 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:15 AM

ஏழைகள் உழைப்பா லிங்கு
     ஏற்றமே பெற்ற போதும்
கோழைகள் போலா மென்றும்
     கொண்டதைப் பதுக்கி வைத்து
வாழவே வழிக ளிட்டே
     வையகம் தன்னில்  வாழ்ந்தும்
சூழவே யிருந்த தெல்லாம்
     தொலைத்திடில் செல்லாக் காசே!

கேடிகள் கூட்டத் தோடு
     கீழ்த்தனத் தாலே சேர்த்த
கோடிகள ணைத்து மள்ளிக்
     கோணியில் கட்டி வைத்தும்
மாடிகள் பலதாம் கட்டி
     மகிழ்வுற இருந்திட் டாலும்
மோடிகள் வந்தால் போதும்
      மொத்தமும் செல்லாக் காசே!

நல்லவர் வேட மிட்டு  
     நாடதன் வளம னைத்தும்
செல்லவே அயலார் நாடு
    செயற்படு வோர்கள் தம்மை
துல்லிய மாய்க்க ணித்து
     தூக்கியே சிறையில் போடும்
வல்லமை கொண்ட ஆட்சி
     வந்திடில் செல்லாக் காசே!

Advertisement

பணத்தினைக் காட்டித் தேர்தல்
     பண்பினைக் கொல்லும் கெட்ட
குணத்தினைக் கொண்டோ ராளும்
     கொடுமைகள் தகரும் வேளை
பிணத்தினைப் போலி வர்கள்
     பேரிழந் திந்தப் பாரில்
அணைத்திடு வார்க ளின்றி
     அலைகையில் செல்லாக் காசே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.