கவிதைமணி

எழுத்து: லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி
தலை எழுத்தின்படி நடக்கும்  என்பது தவறான வாதம்;விதியை மதியால் வெல்லும் இது முன்னேறிய காலம்.தலை எழுத்தாய் தந்தைதாய் பெயரை முன்னிறுத்துவதேஅவர்க்கு மரியாதை ; சரியான பண்பு; இனத்தின் அடையாளம்.கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப்பிடி வேண்டாம்கையெழுத்தை காகிதத்தில் போடும்முன் கருத்தைக்கவனமாய் வாசித்து புரிந்து கொள்ளல் வேண்டும்.புரிய வில்லை யாயின் போட வேண்டாம்  கையெழுத்து.கிறுக்கி வைப்பது கைஎழுத் தாகாது; பெயரைகீழே எழுதி வைப்பதே அறிவுடைமை யாகும்.சுருக்கமாய் எழுதுவது சுருக்கு கையெழுத்து.மருத்துவர் எழுதுவது மருள வைக்கும் மருந்தெழுத்து.எழுத்தை எழுதிப்படிப்பது முன்னாள்   ஆரம்பக் கல்வி;எழுதாமல் படித்திட விரைந்து வந்ததொரு காலம்.அழகிய கையெழுத்தை ரசிக்கும் கடந்த காலம்போய்,அழகாய் எழுதும் காலமும் போய், வந்ததே இக்காலம்.கணனிக் காலம் இன்று நம் கண்முன் உள்ளது,கணனியின் தொடுதிரை தொட்டால் எழுத்துரு மலரும்.தட்டச்சு அறிவதும்  கட்டாயமாகும் ; கற்போம் இதன்வழிஎழுத்தறியும் கல்வி ;  ஏற்போம் இதனை இன்றே நன்றாய். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT