கவிதைமணி

கைகோர்ப்போம்:  கவிஞர் கே. அசோகன்

கவிதைமணி

அன்பு இழையோட ஆசைகள் புறந் தள்ளி
       ஆதரவாய் தூளியிட்டு அழகுபாட் டிசைத்தே
தன்னலத்தை மறந்தே தனலதின் மெழுகான
       தாயவளின் கைகள் கோர்த்திடு வோமே!
பண்போடு கண்டிப்பும் பகலிரவாய் உழைக்கும்
       பாசமிகு தந்தையின் கரம்கோர்ப் போமே!
எண்ணெழுத்தும் இனியநல் ஒழுக்கம் தனை
       எடுத்தியம்பும் ஆசிரியர்தம் கரம்கோர்ப் போமே!

அதிகாலை வேளையிலே துயிலெ ழுந்தே
       ஆர்வமாய் நிலத்திலே  உழபவனுக் கென்றும்
துதிபாடி வணங்கித்தான் நன்றி சொல்லி
       தொண்டினை தொடர கரம் கோர்ப்போமே!
பொதிசுமைபோல வறுமையை சுமந் தோர்க்கு
       பொருளுதவி தந்தேதான் கரம் கோர்ப்போமே!
கொதிக்கின்ற சாலையிலே செருப் பில்லா 
       கூலிகள்தம் துயர்நீக்க கையை கோர்ப்போமே!

சமுதாய நலன்காக்க வீதிகள் தோறும்
      சத்தான கருத்துகளை முழங்கி நின்றே
அமுதான கொள்கையை கொண்ட பேருக்கு
      அழகாய்தான் கோர்ப்போமே இருகரங்கள்! 
அமுதுதமிழில் அழகான பாடல் வடிக்கும்
      அழகுதமிழ் கவிஞர்கள் கரம் கோர்ப்போமே!
தமக்கெனவே வாழாது  தன்னல மில்லா
      தலைவர் உண்டெனின் கைகோர்ப் போமே!                            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT