கவிதைமணி

கைகோர்ப்போம்: இளவல்" ஹரிஹரன்

கவிதைமணி
ஊழலினை ஒழிப்பதற்கும் ஊரை ஏய்க்கும்    உலுத்தரினை அழிப்பதற்கும் கையூட் டையேஆழமாகப் புதைப்பதற்கும் நல்லோர் சொல்லும்    அறிவுரைகள் விதைப்பதற்கும் ஏழை மக்கள்வாழவழி செய்வதற்கும் வறுமைப் பேயை     வந்தவழி ஓட்டுதற்கும் வஞ்சம் கொண்டுதாழமனங் கொண்டவரைத் திருத்து தற்கும்     தயக்கமின்றிக் கைகோர்ப்போம் ஒன்றாய்ச் சேர்ந்தே.கல்வியினைப் பொதுவாக்கி எல்லோ ருக்கும்    காசின்றி வித்தைகளைக் கற்க வைப்போம்.எல்லாரும் எல்லாமும் பெறுவ தற்கே    இருக்கின்ற வளம்யாவும் பொதுவில் வைத்தேஇல்லாமை இல்லாத நிலைவ ளர்ப்போம்    ஏழ்மைநிலை நீக்குதற்குப் வழிகள் செய்வோம்.செல்வங்கள் பகிர்ந்துகொள்ளும் மனம்ப டைக்கும்    சிந்தையிலே கைகோர்ப்போம் ஒன்றாய்ச் சேர்ந்தே.ஆதியிலே இல்லாமல் இடையில் வந்த     அவலமெனும் சாதியினை ஒழிப்போம் இங்குநீதியிலே சமமாக்கும் நிலையைக் கொள்வோம்     நிலைகெட்ட மனிதரினை நேர்வ ழிக்கேஆதரவாய்த் திருப்பிமனம் திருந்தச் செய்வோம்     அரசியலில் ஒழுக்கத்தை அறம்வ ளர்க்கும்பாதையிலே கொணர்ந்திடுவோம் இளையோர் கூட்டம்     பங்குபெறக் கைகோர்ப்போம் ஒன்றாய்ச் சேர்ந்தே.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT