கவிதைமணி

கைகோர்ப்போம்: வெ.ராம்குமார்

கவிதைமணி

ஆள்பவர்களுக்கும்,
அதிகாரவர்குகத்திற்கும்,
அரிதாரம் பூசி வஞ்சித்த
அ(ழி)ரிதார புருஷர்களுக்கும்,
நயவஞ்சகர்களின் மேடைபேச்சுக்கும்
விசிலடித்தான் குஞ்சுகளாக குனிந்து
கைகளைத் தட்டி,தட்டி
முதுகிலும்,மனதிலும்
கூன் விழுந்த நிலை போதும்...
ஊசிக்குள் நூலை கோர்த்தால்,
கலைநயமிக்க உடைகள்,
மானிடம் கைக்கோர்த்தால்,
வாழ்வியலுக்கு கிடைக்கும்
பல விடைகள்!அன்று நாம்
கைகோர்த்தோம்,
ஆட்சிமாற்றம் வந்தது.,
கைகோர்த்தோம்,
கலாச்சாரம் நிமிர்ந்தது.,
கைகோர்த்தோம்,
அந்நிய குளிர்பானம் சிதைந்தது..
இனி,கைகோர்ப்போம்?
விவசாயம்-இயற்கைவளம் காக்க,
தமிழ்மொழி சிறக்க,
மது அரக்கனை ஒழிக்க,
ஊழலை அகற்ற,நமக்கு நாமே
சுதந்திர காற்றை சுவாசிக்க,
தேசத்தை நேசிக்க..
கைகோர்ப்போம்!
இன்ப கரை சேர்வோம்..."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT