கவிதைமணி

புதிய டைரி : கு.முருகேசன்

கவிதைமணி

புதிய டைரி
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும்
பிறக்கும் வெள்ளைத் தாள் குழந்தை!

புதிய டைரி
வெற்றுத் தாள்கள் அல்ல
வெற்றிக்கு கால்கள்!

புதிய டைரி
தொடக்கத்தில் கனவை சுமக்கும்
முடிவில் நினைவை சுமக்கும்!

புதிய டைரி
நேர் வழியில்
முன்னேறத் துடிப்பவனுக்கு
படிக்கற்கள்!
குறுக்கு வழியில்
முன்னேறத் துடிப்பவனுக்கு
தடைக்கற்கள்!

புதிய டைரிகள்
பொதுவுடமை - அதில்
பதியும் கருத்துக்கள் தனியுடமை!
எழுதாத டைரிகளுக்கெல்லாம்
ஒரே மதிப்பு!

எழுதிய டைரிகளுக்கெல்லாம்
 வெவ்வேறு மதிப்பு!
அதனால்தான்
சிலரது  டைரியை
எடைக்கு எடுக்கிறார்கள்!
சிலரது  டைரியைஏலத்தில் எடுக்கிறார்கள்!

டைரி
மனிதனின் ரகசியக் கிடங்கு
மன பாரத்தை தாளில் சுமக்கும் தோழன்!

டைரி
சிலருக்கு மாற்றிக்கொள்ள உதவுகிறது
சிலருக்கு மாட்டிக்கொள்ள உதவுகிறது!

டைரி
கடந்த காலத்தைக் காட்சிப்படுத்தும்
நிகழ் காலத்தை நெறிபடுத்தும்
வருங்காலத்தை வளப்படுத்தும்
முக்காலத்திற்கும் பொருந்தும்
வினைத்தொகை.

சிலரது டைரி
வாழ்கையைப் பதிவு செய்கிறது!
சிலரது டைரி
வரலாற்றைப் பதிவு செய்கிறது!

ஒரு கவிஞனின் டைரி
கவிதையைச் சுமக்கிறது!
ஒரு கைதியின் டைரி
குற்றத்தை சுமக்கிறது!

கண்டுபிடிப்பைச் சொல்வது
அறிவியல் அறிஞனின் டைரி!
கண்டுபிடிக்கச் சொல்வது
அயோக்கியனின் டைரி!

புதிய டைரியோடு
தொடங்க அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT