கவிதைமணி

புதிய டைரி: கவிஞர் கே. அசோகன்.

கவிதைமணி

புத்தாண்டு பிறக்கும் முன்பே
  புத்தம்புது டைரியை ஏந்தி
பத்துமணி ஆனாலுமே அதனை
  பக்குவமாய் பிரித்தே வைத்து
சொத்துபத்து கணக்கெ ல்லாம்
  மொத்தமாய்  குறித்தே வைத்து
பத்திரமாய் பெட்டகத்தில் அதனை
  பாதுகாக்க நானே வைத்தேன் 

ஒவ்வொரு தாட்களி லுமே
   ஓராயிரம் என்றே வைத்து
செவ்விளநீர் விலையை கூட
   செலவாக ஏற்றி வைத்தேன்
பவ்யமாய் பதுங்கி இருக்கும்
   பசும்பொன் விவரம் சொன்னேன்
அவ்வையின் பாடல்கள் கூட
   அறிவரையாய் பதிந்தும் விட்டேன்!

இளவரசியின் தோழியை போல
   எவ்விடமும் எடுத்து சென்றேன்!
பளபள பளிச்சிடும் பக்கத்திலே
   பதுக்கியதை சொல்லி வைத்தேன்
நலம்பயக்கும் நூல்கள் பற்றி
   நான்கே வரிஎழுதி வைத்தேன்
செலவுகள் அதிகம் என்றே
   சேமிப்பை உரக்க சொன்னேன்!

குறிப்புக ளெல்லாம் அழகாய்
   குறித்த வைத்த டைரியில்
அறியாது செய்த  தவறினை
  அறியாமல் எழுதி வைக்க
குறிவைத்து கொண்டவ ளெடுத்து
  வீறுகொண்ட வேங்கை போல
அரிவாள் ஏந்தும்காளி யானாள்!
   அன்றே புது-டைரி மறந்தேனே!               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT