கவிதைமணி

புதிய டைரி: ப. தாணப்பன்

கவிதைமணி

அஞ்சு பைசான்னாலும்
அளந்து செலவழிக்கணும்..
அப்பா கற்றுத்தந்த கணக்குச் சூத்திரம் - டைரி.

முதல்தேதி தேடியலைந்து
கிடைக்காத போது ...
ஒரு மாதம் கழித்து நண்பன்
கையொப்பமிட்டு தந்து
புன்னகைக்கும்  டைரி.

கவிதை எழுதிப் பழகி
கதையில் சறுக்கி
கதையில் விழுந்து
தோற்றழுத கண்ணீரோடு
எழுந்த கதை சொல்லும் ...

நண்பனோடு மட்டமடித்து பார்த்த சினிமா...
மீண்டும் மீண்டும்
ரிகார்டு நோட்டுக்கு
வாங்கிய பொய்ப்பணம்...

எடுத்துப் படித்த அப்பா கொடுத்த அடி
இன்னமும் சுகமாக வலிக்கிறது...
இதெல்லாம் இனி எழுதக்கூடாது என்ற எண்ணம்
காந்தியின் சத்திய சோதனையில் தோற்று
மீண்டும் உண்மையெழுதி மீண்டும் பட்ட அடி ....

பார்த்த பார்வைக்கு துள்ளிக் குதித்து
இருகை விட்டு ஓட்டிய சைக்கிளில்
தடுக்கி விழுந்த சிராய்ப்பு ..
எத்தனை எத்தனை தாங்கி நிற்கின்றாய்.....
வேலை கிட்ட போஸ்டல் ஆர்டரோடு
பலப்பல கம்பெனி விலாசங்கள் கிடைத்த உடன் 
கிடைக்காத நண்பர்களுக்கு
கொடுத்துப் பூரித்தது... வேலை டைரி ...

மணம் பேசி முடித்த பின்
இடைப்பட்ட நாட்களில் 
ஒவ்வொரு பக்கத்திலும்
எழுதிப் பார்த்த அவரின் பெயர்...

பேசிப் பேசி மகிழ்ந்த தருணங்கள்
பூக்களாய் சிரித்து நின்றது....

சாதனையை 
இழப்பை 
தேடலை
பகிர்தலை 
சொல்லி முடித்து
இன்னும் சொல்ல
காத்திருக்கிறது என்னோடு
எழுதப்படாத புதிய டைரி....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT