கவிதைமணி

புதிய டைரி: லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி

புதிய டைரியைப் புரட்டிப் பார்த்தேன் ,
அதிலொரு நாளும் தாளும் குறைந்தது
வாரமும் மாதமும் குறையாத போதும்.
காரணம் அறிந்தேன் ஆண்டோ பதினேழு.

மூன்றாண்டு மட்டுமே ஒருநாளை இழக்கின்றோம்,
நான்காம் ஆண்டிலே நாளொன்றை சேர்க்கிறோம்.
நூறாண்டு வாழ்ந்திட  உறுதி  ஏற்போம் என்றும்,
நோயற்ற  நல்லுடலாய்க் காத்துக்   கொள்வோம்.

நாளென்று சொல்லுவது வாளே ஆகும்
நமதாயுளின் ஒருநாளை குறைப்பதாலே;
வள்ளுவரும் சொல்லி வைத்தார் என்றாலும்
மனதிலே அச்சமதை நீக்கி வைப்போம்.

முடிந்த ஆண்டின் தவறுகளை நீக்கி வைப்போம்
முன்னுள்ள புத்தாண்டில் நன்மை சேர்ப்போம்
பொய்யாமை நீதி நேர்மை அன்புகொண்டு  
புத்தாண்டை வரவேற் போம்புது டைரியுடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT