கவிதைமணி

புதியடைரி : அழகூர். அருண். ஞானசேகரன்

கவிதைமணி

புத்தாண்டுக்  குறிப்பேட்டில்  நல்லநல்ல  செய்தியையே
                பொழுதெல்லாம்  எழுதவேண்டும்;
        போனஆண்டு  தனில்நிகழ்ந்த  வேண்டாத  நிகழ்வுகள்
                புத்தாண்டில்  நிகழவேண்டாம் !
எத்தனையோ  அவலங்கள்  தன்னைநாம்  கண்டிட்டோம்
                என்றும்நம்  நினைவில்நிற்கும்;
        எல்லாமும்  மோடியால்  வந்திட்ட  வினையாகும்
                இந்தியர்கள்  மறக்கமாட்டார் !
உத்தமமோ  பணத்தாள்களை  செல்லாதென  ஆக்கியதும்
                 உரியநல்  பலன்கிடைத்ததா ?
        ஒழியுமோ  கருப்புப்  பணமதுவும்  லஞ்சமதும்
                 ஊழலதும்  நாட்டிலினிமேல் ?
நித்தமொரு  திருத்தமதை  மோடியவன்  சொன்னதேன்
                 நினைத்துநாம்  சிரிக்கத்தானோ ?
        நிறைவான  மதிதன்னைக்  கொள்ளாதான்  மோடியென
                 நிரூபணம்  ஆனதுண்மை !

புதுவருடக்  குறிப்பேட்டில்  புலம்பல்களே  இல்லாமல்
மதுரமிகுச்  செய்திகளே  மணக்கட்டும்;-- பொதுவாக
நன்றான  ஆட்சிகண்டு  நலன்களெல்லாம்  மலியட்டும்;
என்றென்றும்  தொடரட்டும்  இது!

பதினாறாம்  ஆண்டுக்  குறிப்பேட்டில்---நாம்
          பார்த்தவை  அனைத்தும்  அவலங்கள்!
மதிகெட்டச்  செயலென்றே  ஆனதென்ன---பணத்தாள்
          மாற்றமும்  மக்களை  வறுத்ததென்ன!
சதிகாரர்  மல்லையா  லலித்மோடி---போன்றோர்
          சத்தமே  இல்லாமல்  தப்பியதென்ன?
புதியயிவ்  ஆண்டின்  குறிப்பேட்டில்---இதுபோல்
          போக்கற்றச்  செய்திகள்  வேண்டாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT