முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: உஷா முத்துராமன்

கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: உஷா முத்துராமன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

கள்ளமில்லா மழலையே 
நீ கண் சிமிட்டினால் 
உள்ளத்து கவலையெல்லாம் 
மறந்து  பூரிப்பாகுதே!
முதுமையில்  இருக்கும்  தாயே 
பதுமை  போல....
நீ கண் சிமிட்டினால் 
என்னை  தாலாட்டி  வளர்த்த 
காலம்... மனதில்  வர 
ஞாலமே  உற்சாகமாகுதே!
மேகமே....... நீ மின்னல் 
என்ற கண் சிமிட்டினால் 
மழை பொழிந்து நீர்
கொடுப்பாய்  என்று 
எதிர் நோக்கி  மனம் 
உற்சாக ஊஞ்சலில் 
பூரிப்புடன் ஆடுதே!!!
இமைகளை படைத்த கடவுள்
சுமை எதுவும் கண்களுக்கு 
வரக்கூடாதே என்ற 
எச்சரிக்கைக்காகத்தான்!
சிமிட்டும் கண்கள் ஆயிரம் மொழி 
பேசுமே!   இப்படி 
பேசும் கண்கள் நாம் 
இறந்த பின்னும் வாழ.....
சிமிட்டும் கண்களை 
தானம்  செய்வோம்.....
இறந்த பின்னும் வாழுவோம்!  

முழு கட்டுரையைப் படிக்க →