நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5

நெஞ்சமே, எம்பெருமானை, ஏழு உ

செ.குளோரியான்

கண்டாயே நெஞ்சே, கருமங்கள் வாய்க்கின்றுஓர்
எண்தானும் இன்றியே வந்து இயலும்ஆறு,
உண்டானை உலகுஏழும், ஓர் மூ அடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே.

நெஞ்சமே, எம்பெருமானை, ஏழு உலகங்களையும் உண்டவனை, மூன்றடிகளால் அளந்தவனை நீ கண்டுகொண்டாயல்லவா? (பெருமான் தன்னை உண்பான், அளப்பான் என்று அந்த உலகம் எண்ணியிருக்குமா? இல்லை. அதற்கு நிகழ வேண்டிய நன்மை தானாக நிகழ்ந்தது. அதுபோல,) ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டுமென்றால், அதைப்பற்றி நாம் எண்ணாமலே இருந்தால்கூட அது (அவனருளால்) தானாக நிகழும், அதை நீ பார்த்துவிட்டாயல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT