நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9

எம்பெருமான் ஆண்களில் சிறந்தவன்

செ.குளோரியான்

நம்பியை, தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை,
உம்பர், வானவர் ஆதி, அம் சோதியை,
எம்பிரானை என்சொல்லி மறப்பனோ.

எம்பெருமான் ஆண்களில் சிறந்தவன், அழகிய தென்குறுங்குடியில் எழுந்தருளியிருப்பவன், செம்பொன்போலத் திகழும் திருமேனியைக் கொண்டவன், வானுலகைச் சேர்ந்த வானோரின் தலைவன், அவர்களின் செயல்களுக்கெல்லாம் காரணமானவன், அழகிய சோதி, எம்பிரான், அவனை நான் என்னசொல்லி மறப்பேன்? (ஒருபோதும் மறக்கமாட்டேன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT