நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 2

பெருமானின் திருவடியில்

செ.குளோரியான்

கோட்பட்ட சிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேண்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்,
ஆள்பட்ட எம்மேபோல் நீயும் அரவுஅணையான்
தாள்பட்ட தண்துழாய்த்தாமம் காமுற்றாயே?

கூரான அலகைக்கொண்ட அன்றில்பறவையே, எதையோ எண்ணிக்கொண்டு நீண்ட நள்ளிரவிலும் படுக்கைக்குச் செல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறாயே, என்ன ஆயிற்று?

நீயும் எங்களைப்போல் எம்பெருமான் மீது நேசம் கொண்டாயோ? பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் பெருமானின் திருவடியில் பொருந்திய குளிர்ச்சியான துளசிமாலை

மீது விருப்பம் கொண்டாயோ? அதனால் உன் தூக்கம் போனதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT