நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7

பகைவர்களைவிடக் கொடுமை செய்கிறாய்

செ.குளோரியான்

தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு, எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர்வகையில் கொடிதாய், எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி, கனை இருளே.

செறிந்த இருளே, எம்பெருமான் நாரணனை எண்ணி நாங்கள் எங்களுடைய மடநெஞ்சத்தை இழந்தோம், ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கிறோம், நீயோ, நடுவில் வந்து எங்களைத் துன்புறுத்துகிறாய், பகைவர்களைவிடக் கொடுமை செய்கிறாய், நெடுங்காலம் இப்படி எங்களுடன் பகையாகவே இருக்கப்போகிறாயா? நீ வாழ்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT