நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 8

இருள் மிகுந்திருப்பது போன்ற

செ.குளோரியான்

இருளின் திணிவண்ணம் மாநீர்க்கழியே, போய்
மருள்உற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்,
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?

இருள் மிகுந்திருப்பது போன்ற வண்ணத்தைக்கொண்ட, அதிக நீரைக்கொண்ட கழி என்கிற நீர்நிலையே, நீ மிகவும் மயங்கிப்போயிருக்கிறாய், இரவும் பகலும் தூங்கினாலும் நீ தூங்குவதில்லை, என்ன ஆயிற்று? நீயும் எங்களைப்போல் திருமால் மீது நேசம்கொண்டாயோ? உருண்டுவரும் சக்கரத்தின் வடிவில் வந்த அசுரனை உதைத்துக்கொன்ற அப்பெருமான் அருள்புரிவான் என்கிற பெருவிருப்பத்தில் ஆழ்ந்து வருந்தினாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT