நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 2

சேவலோடு சேர்ந்து

செ.குளோரியான்

பாடல் 2

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள், அணி முழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே.

உங்கள் இனத்தைவிட்டுப் பிரியாமல் சேவலோடு சேர்ந்து அமர்ந்திருக்கும் அன்புமிக்க குருகுக் கூட்டங்களே, அழகிய திருமுழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பிரிந்து நான் இழிவுக்குள்ளானேன், என்னுடைய உறவினர்களெல்லாம் என்னைப் பழிக்கிறார்கள், இப்படி நான் ஏன் இங்கே வாழவேண்டும்? தன்னுடைய பரிவாரங்களுடன் அங்கே எழுந்தருளியிருக்கும் அப்பெருமானுடன் சேரும் தகுதி எனக்கில்லையா? இதை நீங்கள் கேட்டுவாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT