பாடல் 4
திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்,
திருமூழிக்களம் என்னும் செழுநகர்வாய் அணிமுகில்காள்,
திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளிவிசும்பு கடியுமே?
அழகிய மேகங்களே, சிறந்த திருமேனி கொண்டவர் எம்பெருமான், தீவினைகளைப் புரிந்தவளாகிய நான் எம்பெருமானிடம் உங்களைத் தூது விடுகிறேன், திருமூழிக்களம் என்னும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள வளமான திருத்தலத்துக்குச் செல்லுங்கள், ‘இந்தப் பெண்ணுக்கு உங்களுடைய திருமேனியை அருளுங்கள்’ என்று அவரிடம் சொல்லுங்கள், அப்படிச் சொன்னால், அவர் கோபிப்பார் என்று நினைக்கிறீர்களா? எம்பெருமானைப்போன்ற ஒளியைக்கொண்ட உங்களுடைய ஒளியை அகற்றி, தெளிந்த வானத்திலிருந்தும்
உங்களை அகற்றித் தண்டிப்பார் என்று நினைக்கிறீர்களா? (மாட்டார்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.