நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 6

வண்டுகள் பூக்களிலே

செ.குளோரியான்

பாடல் 6

தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்,
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும்
மாதரைத் தம் மார்பு அகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே.

தூய்மையான சொற்களைப் பேசுகின்ற வாயைக்கொண்ட வண்டினங்களே, வண்டுகள் பூக்களிலே சத்தமிட்டுக்கொண்டு மதுவை உறிஞ்சுகின்ற பொழில்களைக்கொண்ட திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருக்கிறவர் எம்பெருமான், திருமகளைத் தன்னுடைய மார்பிலே வைத்தவர், அவரிடம் சென்று என்னுடைய தூது மொழிகளைச் சொல்லுங்கள், அப்படிச் சொல்லும்போது, அவரை எண்ணி நான் மெலிந்திருப்பதையும், என் கை வளையல்களும் ஆடையும் கழன்றுபோகும்படி வாடுவதையும் சொல்லுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT