நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 8

எனக்குத் தருவாய்

செ.குளோரியான்

பாடல் 8

அருளாது ஒழிவாய், அருள்செய்து அடியேனைப்
பொருள்ஆக்கி உன் பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே.

அழகிய திருநாவாயிலே எழுந்தருளியிருக்கும் என் தெய்வமே, எம்பெருமானே, நீ எனக்கு அருள்செய்யாமலிருந்தாலும் சரி, அருள்செய்து என்னை ஒரு பொருட்டாக்கி உன்னுடைய அழகிய திருவடிகளின்கீழ் புகவைத்தாலும் சரி, எந்த மயக்கமும் இல்லாமல் உன்னை நான் நெஞ்சத்தில் இருத்தவேண்டும், அந்தத் தெளிவை எனக்குத் தருவாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT