முகப்பு
தினம் ஒரு தேவாரம்

3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 7

இறைவன் எல்லாப் பொருட்களாகவும் உள்ள தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2015 at 12:50 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:31 PM

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடுவானாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமையாகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கலாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர் பேசுவன பேசுதுமே பிழையற்றோமே

விளக்கம்

நிற்பன நடப்பன = சராசரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நேர் தமிழ்ச் சொல். ஒரே இடத்தில் அசையாமல் நிற்கும் தாவரங்கள் நிற்பன என்றும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் வல்லமை படைத்த பிராணிகள், மனிதர்கள் உட்பட, அனைத்து ஜீவராசிகளும் நடப்பன என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

சரம் = அசைதல்

அசரம் = அசைய முடியாதவை

தற்பரம் = உயிரினும் மேம்பட்டது.

இறைவன் எல்லாப் பொருட்களாகவும் உள்ள தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. அரசனின் விருப்பத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களது கொள்கையினை மாற்றிக் கொள்வோர்களை பேயர் என்று அப்பர் பிரான் சாடுகின்றார்.

பொழிப்புரை

அகன்ற உலகில் உள்ள, ஓரிடத்தில் நிற்கும் தன்மை படைத்த தாவரங்களாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் திறன் கொண்ட பலவகையான உயிர்களாகவும், நிலமாகவும், நீராகவும், நெருப்பாகவும், காற்றாகவும், அகன்ற வானமாகவும், மிகவும் நுண்ணிய பொருளாகவும், மிகவும் பெரியதாகவும், பெருமை உடையதாகவும், மிகவும் அரிய பொருளாகவும், தன்னிடம் அன்பு கொண்டவர்களுக்கு எளியனாகவும், எவராலும் அளக்கலாகத் தன்மை உடையவனும், அனைத்து உயிர்களுக்கும் மேலானவனும், சதாசிவமாக இருப்பவனும், தானாகவும் அதே சமயத்தில் மற்ற உயிர்களுடன் கலந்தும் இருப்பவனும் ஆகிய சிவபெருமானையும் அவனது தன்மைகளையும் புகழ்ந்து பேசும் வல்லமை நாம் படைத்துள்ளோம். நாம் அரசனுக்கு ஏற்ப பேசும் பேயர்களாக மாறமாட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.