முகப்பு
தினம் ஒரு தேவாரம்

29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 6

தன்னை இடைவிடாது தியானிக்கும் அடியார்களுக்கு, அவர்களது மனதினில் அலை பாயாத சிந்தனையை வைத்த சிவபெருமான்,

Updated On : 27 ஜூன், 2016 at 4:27 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:07 PM

பாடல் 6

உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமும் நவில வைத்தார்
கட்டங்கம் தோள்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

உட்டங்கு = உள் தங்கு. நட்டு = உயிர்களுக்கு இரங்கி. உள்குதல் = இடைவிடாது நினைத்தல். விட்டங்கு = விண்+தங்கு, வேள்வி செய்வதால் விளையும் பல நற்பயன்களில் ஒன்று மழை பொழிவது என்று கருதப்படுகின்றது. இந்த கருத்தினை உணர்த்தும் வகையில் ஞானசம்பந்தர், அந்தணர்கள் வாழ வேண்டும், அவர்கள் வேள்வியில் அளிக்கும் ஆகுதிகளைப் பெறுகின்ற தேவர்கள் வாழ வேண்டும், வேள்விகள் செய்வதற்கு தேவையான பொருட்களை அளிக்கும் பசுக்கள் வாழ வேண்டும், நாட்டில் மழை பொழிய வேண்டும் என்று ஒரு பாடலில் (3.54.1) கூறுகின்றார்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எலாம் அரன் நாமமே
சூழ்க வையகம் எங்கும் துயர் தீரவே

வேள்விகள் செய்வதால் மழை பொழியும் என்ற கருத்து வீழிமிழலைப் பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (1.82.5) கூறப்படுகின்றது. இந்த பாடலில் இரதி தேவிக்கு அருளிய தன்மையும் உணர்த்தப்படுகின்றது.

கண்ணில் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக்கு அருள் செய்த பெருமான் உறை கோயில்
கண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே

பொழிப்புரை

தன்னை இடைவிடாது தியானிக்கும் அடியார்களுக்கு, அவர்களது மனதினில் அலை பாயாத சிந்தனையை வைத்த சிவபெருமான், அவர்களது உள்ளத்தைத்தான் தங்கும் இடமாக வைத்துள்ளார்; வேள்வியில் எழுப்பப்படும் தீப்புகைகள் விண்ணளவும் சென்று, மேகங்களை மழை பொழிய வைத்து நாட்டு மக்களின் துயரங்கள் தீர்வதற்கு வழி வைத்தவர் சிவபெருமான்; நள்ளிருளில் நடமாடும் சிவபெருமான், ஞான நூல்களைப் பயிலும் வாய்ப்பினை மனிதர்களின் நாவினுக்கு வைத்தவர் ஆவார்; அவர் கட்டங்கம் எனப்படும் மழு ஆயுதத்தை, தனது தோள் மேல் வைத்துள்ளார். இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.