முகப்பு
தினம் ஒரு தேவாரம்

29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 9

பிரமனும் திருமாலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாதம் செய்துகொண்டிருந்த சமயத்தில்,

Updated On : 27 ஜூன், 2016 at 4:39 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:08 PM

பாடல் 9

சதுர்முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு
எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் தன்னைக் காறனில் பிதிர வைத்தார்
கதிர்முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

கதிர்முகம் = பிறைக் கீற்று. இகலுதல் = வேறுபாடு கொள்ளுதல், தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்தமை. எதிர்முகம் = கண்கூடு. பிதிர்முகன் = இயமன். காறனில் = கால் தனில்.

பொழிப்புரை

பிரமனும் திருமாலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாதம் செய்துகொண்டிருந்த சமயத்தில், அவர்களுக்கு யார் பெரியவன் என்பதனை காட்டும் முகமாக, அவர்களின் எதிரே, அவர்கள் இருவரும் அடியும் முடியும் காணாதவாறு பெரிய தீப்பிழம்பாக நின்றவர் சிவபெருமான்; பிதிர்முகன் என்று அழைக்கப்படும் இயமனைத் தனது காலினால், அவனது வாகனத்திலிருந்து சிதறி விழுமாறு உதித்தவர் சிவபெருமான்; அவர் தான் ஒளிவீசும் சந்திரனைத் தனது சடையில் வைத்தவர். இத்தகைய பெருமை உடைய பெருமான், கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைச் தலைவராக விளங்குகின்றார்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.