முகப்பு
தினம் ஒரு தேவாரம்

30. வண்ணமும் வடிவும் - பாடல் 2

காதல் வயப்பட்டு, தனது காதலனுடன் சேர முடியாத நிலையை எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தால் உணவும் சரியாக உட்கொள்ளாமல், மற்று எதிலும் நாட்டம் இல்லாமல்

Updated On : 8 ஜூலை, 2016 at 5:59 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:09 PM

பாடல் 2

மருந்து வானவர் உய்ய நஞ்சுண்டு உகந்து
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே

விளக்கம்

காதல் வயப்பட்டு, தனது காதலனுடன் சேர முடியாத நிலையை எண்ணி வருந்தி, அந்த வருத்தத்தால் உணவும் சரியாக உட்கொள்ளாமல், மற்று எதிலும் நாட்டம் இல்லாமல், உறக்கத்தினையும் இழந்து தவிக்கும் பெண்களை நாம் இன்றும் காண்கின்றோம். அப்போது அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள், தாயாக இருந்தாலும் சரி, தோழியாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்த காதலியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஏதேனும் பரிந்து உரைத்தால், அந்த உரைகளை ஏற்காமல், அவர்கள் பேரில் கோபம் கொள்வது இயற்கை, அந்த நிலையினை சித்தரிக்கும் பாடல் இது. மருந்து = அமுதம், தாங்கள் நீண்ட வாழ்நாள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேவர்கள் உட்கொண்டது என்பதால் மருந்து என்று இங்கே குறிப்பிடுகின்றார். வன் = கடல்.

இந்தப் பாடல் நமக்கு சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.45) முதல் பாடலை நினைவூட்டுகின்றது. சிவபெருமான் மீது மிகுந்த காதல் கொண்டுள்ள தனது மகளை. அடக்கமான பெண்ணாக வீட்டில் இரு என்று கூறிய தன்னை நோக்கி, எனக்கு நீதி சொல்வதற்கு நீ யார் என்று கோபப்படும் தலைவியின் செயலை நாம் இந்த பாடலில் காண்கின்றோம். அந்நாள் வரை தன்மீது அன்பு காட்டி தன்னை வளர்த்த தாயினையே புறக்கணிக்கும் அளவுக்கு, சிவபெருமான் பால் தலைவி கொண்டுள்ள காதல் இருக்கிறது என்பதை, மிகவும் நேர்த்தியாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் இது.

மாது இயன்று மனைக்கு இரு என்றக்கால்
நீதி தான் சொல நீ எனக்கு ஆர் எனும்
சோதியார் தரு தோணிபுரவர்க்குத்
தாதியாவன் என்னும் என் தையலே

பொழிப்புரை

பாற்கடலிலிருந்து எழுந்த கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து தேவர்கள் பிழைப்பதற்காக, தான் நஞ்சினை உண்டு, தங்களது வாழ்நாளை நீட்டிப்பதற்கு அவர்கள் அமிர்தம் அருந்த அதனைக் கண்டு மகிழ்ந்தவன் சிவபெருமான். கடல் சூழ்ந்த கழிப்பாலையுள் வீற்றிருக்கும் பெருமானின் திருந்திய திருவடிகளைத் தனது மனதினில் வைத்து, அவன்பால் தீராத காதல் கொண்டவளாக இருக்கும் எனது மகள், தனது உடலினை வருத்திக் கொள்கின்றாளே என்று அவளுக்கு பரிந்து பேசி, அறிவுரை கூறினால் அதனை ஏற்காமல் என்னை பழிக்கின்றாள். அந்த அளவுக்கு, சிவபிரான் மீது கொண்ட அவளது காதல் அவளது கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.