30. வண்ணமும் வடிவும் - பாடல் 7
விதி என்ற சொல்லுக்கு முறை என்று பொருள் கொண்டு, இறைவனே முறையாக அருள வேண்டும் என்று வேண்டியதாக பொருள் கொள்ளலாம்.
பாடல் 7
ஐயனே அழகனே அனல் ஏந்திய
கையனே கறை சேர்தரு கண்டனே
மையுலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே விதியே அருள் என்னுமே

விளக்கம்

மையுலாம்
= சோலைகளில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால், சூரியனின் கதிர்கள்
ஊடுருவ முடியாதபடி இருள் சூழ்ந்த சோலைகள் என்று தலத்தின் நிலவளம்
குறிப்பிடப்படுகின்றது. இருண்ட சோலைகளைக் கண்டதும், அப்பர் பிரானுக்கு பெருமானின் இருண்ட கழுத்து நினைவுக்கு வந்ததுபோலும். தான் காணும் காட்சிகளில் எல்லாம் சிவபிரானையே உணர்ந்தவர் அல்லவா அப்பர் பிரான்.

விதி என்ற சொல்லுக்கு முறை என்று பொருள் கொண்டு, இறைவனே முறையாக அருள வேண்டும் என்று வேண்டியதாக பொருள் கொள்ளலாம். விதி என்பது, சென்ற பிறவிகளில் உயிர் செய்த வினைகளுக்கு ஏற்ப, இந்த பிறவியில் நம்மை வந்தடையும் நன்மை தீமைகளின் தன்மையை முடிவு செய்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், நன்மை மற்றும் தீமைகள் ஏற்பட காரணமாக இருப்பவனே என்றும் பொருள் கொள்ளலாம். முந்தைய பாடல்களில் அப்பர் நாயகியின் அன்பின் தன்மை குறிப்பிடப் படுவதால், தன்னை முறையாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் வேண்டுகின்றாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. ஐயன் = தலைவன், அழகியவன்.

பொழிப்புரை

சூரியனின் கதிர்கள் உள்ளே புக முடியாதபடி மரங்கள் அடர்ந்த சோலைகள் கொண்டு உள்ள சோலைகள் மிகுந்த கழிப்பாலைத் தலத்தின் இறைவனே, எனது தலைவனே, கையில் அனல் ஏந்தியவனே, ஆலகால விடம் உண்டதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனே, அழகியவனே, நீதான் முறையாக எனது காதலை ஏற்றுக்கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எனது மகள் எப்போதும் கூறுகின்றாள்.

Advertisement