27. நன்று நாள் தொறும் - பாடல் 8
நடனம் ஆடுபவனும், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும், வட்ட வடிவத்தில் அமைந்த கச்சினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக்
பாடல் 8
நட்டம் ஆடிய நம்பனை நாள் தொறும்
இட்டத்தால் இனிதாக நினைமினோ
வட்ட வார் முலையாள் உமை பங்கனார்
சிட்டனார் திருவேட்களம் தன்னையே

விளக்கம்

வார் = கச்சு. சிட்டனார் = அனைவரிலும் உயர்ந்தவன்.

பொழிப்புரை

நடனம் ஆடுபவனும், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும், வட்ட வடிவத்தில் அமைந்த கச்சினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், திருவேட்களம் எனப்படும் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை நீங்கள் தினமும் நினைப்பீர்களாக.

Advertisement