27. நன்று நாள் தொறும் - பாடல் 9
சிவநெறியைச் சாராத மூவர்களின் கோட்டைகளை அழித்த பெருமான் என்பதால், நாம் அவரிடம் அச்சம் கொண்டு அவரது அருகில் செல்லாமல் இருந்துவிடக்கூடாது
பாடல் 9
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொன் திருவேட்களச் செல்வரே

விளக்கம்

குட்ட வல்வினை = குழியாகிய வல்வினை. வினைகளின் பிடியில் சிக்கியுள்ள நாம் அனைவரும், நமது வினைகளை முழுவதும் தீர்த்துக் கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லற்படுவதால் வினைக்குழி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சிட்டர் = ஸ்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.

சிவநெறியைச் சாராத மூவர்களின் கோட்டைகளை அழித்த பெருமான் என்பதால், நாம் அவரிடம் அச்சம் கொண்டு அவரது அருகில் செல்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதை உணர்த்தும் வண்ணம், ஆயினும் என்ற சொல்லை பயன்படுத்தி, தன்னைச் சார்ந்தவர்களின் வினைகளைத் தீர்த்து பெருமான் அருள் புரிவார் என்பதை இங்கே அப்பர் பிரான் நமக்கு அறிவிக்கின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு அவரது நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (4.11.6) ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், தன்னைச் சாராத மனிதர்களுக்கு நலம் ஏதும் நல்காத பெருமான், ஆயினும் தன்னைச் சார்ந்தவர்க்கு நாள்தோறும் நலம் நல்குவான் என்று கூறுவதை நாம் உணரலாம். சலம் = சஞ்சலம். உள்ளொன்றும் புறமொன்றுமாக இல்லாமல், ஒரே மாதிரியாக இருப்பவர் என்று பொருள். எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும், நமச்சிவாய மந்திரம் உரைப்பவர்கள் அனைவர்க்கும், நல்ல குலத்தில் பிறந்தோர்கள் அடையக்கூடிய பயனை, அந்த பஞ்சாக்கர மந்திரம் அளிக்கும் என்று கூறுகின்றார்.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலம்
குலம் இலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

பெருமான் சீற்றம் கொண்டால் விளைவது என்ன என்பதை உணர்த்தும் அதே பாடலில் அவன் கருணை கொண்டால் நமது வினைகளைத் தீர்ப்பான் என்று பெருமானின் இரு வேறு செயல்பாடுகளை விளக்கும் அப்பர் பிரானின் பாடல் நமக்கு, திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் மணிவாசகர், தென்முகக் கடவுளாக சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிய பெருமான். முப்புரங்களை எரித்த வீரனாக மாறிய வரலாற்றினை நமக்கு உணர்த்துகின்றார். கருணையே வடிவமாக உள்ள பெருமான், தேவர்கள் பால் கருணை கொண்டு, முப்புரம் எரித்த வீரனாகவும் மாறுவார் என்று கூறுகின்றார்.

நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காணேடி
அன்றாலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ

பொழிப்புரை

வட்ட வடிவில் மதில்கள் சூழ்ந்து, வலிமைமிக்க கோட்டைகளாக விளங்கிய முப்புரங்களை

எரித்து திரிபுரத்து அரக்கர்களை அழித்தவர் சிவபெருமான். ஆயினும் அவர், தன்னைச் சார்ந்த அடியார்களின்பால் கருணை கொண்டு, அவர்கள் வீழ்ந்திருக்கும் வினைக் குழிகளைத் தூர்த்து, அவர்களை கரையேற்றி, அவர்களின் மனதினை குளிர்விக்கும் சிறந்த குணமுடையவர் ஆவார். அவர் பொன் போன்று அருமையான தலமாகிய வேட்களத்தில் உறைகின்றார். அவரை வணங்கி வழிபட்டு, நீங்கள் உங்களை ஆழ்த்தியிருக்கும் வினைக் குழியிலிருந்து வெளியே வருவீர்களாக.

Advertisement