28. வனபவள வாய் திறந்து - பாடல் 3
எம்பெருமானது முடியின் மேல் உள்ளது இளைய திங்கள் என்றும், எம்பெருமானின் மேனி நிறம் குங்குமத்தின்
பாடல் 3
பிறந்து இளைய திங்கள் எம் பெம்மான் முடி மேலது என்கின்றாளால்
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்
மறம் கிளர் வேற்கண்ணாள் மணிசேர் மிடற்றவனே என்கின்றாளால்
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

பிறந்திளைய திங்கள் = தேய்ந்து அழிந்த நிலையில் சரணடைந்த சந்திரனின் தேய்ந்து கொண்டிருந்த நிலை மாறி, வளரும் நிலைக்கு மாறிய சந்திரனின் பிறை. கறங்கும் = சுழலும். கறங்கு ஓதம் = சுழன்று வீசும் அலைகளால் இடைவிடாது ஒலிக்கும் கடல். மறம் = வீரம். கிளர் = வெளிப்படுத்தும். பொதுவாக குங்குமம் என்றவுடன் பெண்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கே அப்பர் நாயகிக்கு, குங்குமம் என்றதும், சிவபிரானின் மேனி நிறம்தான் நினைவுக்கு வருகின்றது போலும். இந்த நிலை, அப்பர் நாயகி சிவபிரான் மீது கொண்டுள்ள காதலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றது.

பொழிப்புரை

எம்பெருமானது முடியின் மேல் உள்ளது இளைய திங்கள் என்றும், எம்பெருமானின் மேனி நிறம் குங்குமத்தின் நிறத்தை ஒத்தது என்றும், வீரத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய பார்வதி தேவியை உடலில் கொண்டவனே என்றும், நீல மணியின் நிறத்தை கழுத்தில் உடையவனே என்றும் என் மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டு இருக்கின்றாள். சுழன்று சுழன்று அடித்து இடைவிடாது ஓசை எழுப்பும் அலைகள் மலிந்த கடலின் அருகில் உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

Advertisement