முகப்பு
தினம் ஒரு தேவாரம்

28. வனபவள வாய் திறந்து - பாடல் 5

பழி ஏதும் இல்லாதவன் என்றும், மிகுந்த புகழ் உடையவன் என்றும்,

Updated On : 18 ஜூன், 2016 at 10:50 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:02 PM

பாடல் 5

பழியிலான் புகழுடையான் பால் நீற்றன் ஆனேற்றன் என்கின்றாளால்
விழி உலாம் பெரும் தடங்கண் இரண்டல்ல மூன்றளவே என்கின்றாளால்
சுழியுலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்
கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

கழி = உப்பங்கழி. தடம் = அகன்ற. பால் நீற்றன் = பால் போன்று வெண்மையான திருநீற்றினை அணிந்தவன். ஏற்பது இகழ்ச்சி என்பது ஆன்றோர் வாக்கு. தாருகவனத்து கோலத்தை முந்தைய பாடல் குறிப்பிட்ட அப்பர் நாயகி, தாருகவனம் என்றவுடன் அனைவருக்கும் சிவபெருமான் பிச்சைப் பெருமானாக சென்ற கோலம் நினைவுக்கு வரும் என்பதால், அவ்வாறு பிச்சை ஏற்றதால் பழி ஒன்றினையும் பெறாத பெருமான் என்பதை முதலில் தெளிவு படுத்திவிட்டு, மேலே தான் பெருமானைக் கண்ட கோலத்தினை இங்கே கூறுகின்றாள்.

பொழிப்புரை

பழி ஏதும் இல்லாதவன் என்றும், மிகுந்த புகழ் உடையவன் என்றும், பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்தவன் என்றும், எருதினை வாகனமாகக் கொண்டவன் என்றும், மற்றவர்கள் போல் இரண்டு விழிகள் அல்லாமல், நீண்டு அகன்ற மூன்று விழிகளைக் கொண்டவன் என்றும், நீர்ச் சுழிகளுடன் பரந்து மிகவும் வேகமாக இறங்கி வந்த கங்கை நீற்றினை சடையில் தரித்தவனே என்றும் எப்போதும் சிவபெருமானின் அடையாளங்களையே சொல்லிக்கொண்டு இருக்கின்றாள். உப்பங்கழிகள் சூழ்ந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, அவள் கண்டாள் போலும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.