முகப்பு
தினம் ஒரு தேவாரம்

28. வனபவள வாய் திறந்து - பாடல் 8

ஓர்ந்துகொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும்,

Updated On : 21 ஜூன், 2016 at 4:11 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:03 PM

பாடல் 8

ஓரோதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீரோதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்
பாரோத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
காரோதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

ஓதம் = பாடம், கடல்.

பொழிப்புரை

ஓர்ந்துகொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும், கடல் போன்று பரந்த கங்கை நதியை ஏற்கும் அளவுக்கு உயர்ந்த சடையினை உடையவனே என்றும், பொன்போன்று மிளிரும் சடையை உடையவனே என்றும், உலகினை நான்கு புறங்களிலும் சூழ்ந்து காணப்படும் கடலில் விளையும் பவளத்தின் நிறத்தை உடையவனே என்றும் எனது மகள் ஓயாது சொல்லிக்கொண்டு இருக்கின்றாள். கருமை நிறம் கொண்ட கடலின் அருகே உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.