29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 2
நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றின் தன்மையை அடியார்களுக்கு உணர்த்தி, அவர்கள் வீடுபேற்றினை உணருமாறு செய்தவர் சிவபெருமான்;
பாடல் 2
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

விண் = வீடுபேறு. வேட்டல் = விரும்புதல். பயிலுதல் = கூடி இருத்தல்.

பொழிப்புரை

நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றின் தன்மையை அடியார்களுக்கு உணர்த்தி, அவர்கள் வீடுபேற்றினை உணருமாறு செய்தவர் சிவபெருமான்; வேள்விகளால் விளையும் பயன்களை உணரவைத்து, மக்கள் வேள்விகளை விரும்பச் செய்தவர் சிவபெருமான்; தனது பக்தர்கள் பாடலுடன் இனிமையாக பண்களை இசைத்துப் பாடவும் தன்னை வழிபடுவதில் பயிற்சி பெறவும் வைத்தவர் சிவபெருமான்; வாமனனாகச் சென்று மூன்று அடி மண்ணினை இரந்து பெற்ற திருமால், திரிவிக்ரமனாக மாறி ஈரடியால் மூன்று உலகங்களையும் அளக்க வைத்தவர் சிவபெருமான்; வேறு எவருக்கும் இல்லாத வகையில் தனது நெற்றியில் கண்ணினை வைத்தவரும் அவரே. அவர்தான் கழிப்பாலைத் தலத்தில், கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார்.

Advertisement