முகப்பு
தினம் ஒரு தேவாரம்

29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 5

கூரிருள் என்பதற்கு அகத்திருள் என்று பொருள் கொண்டு, அகத்திருள், புறத்திருள், உலகத்தினைச் சூழ்ந்துள்ள மாய இருள், ஆகியவற்றை ஒழிக்கும் திறமை வாய்ந்த பெருமான்,

Updated On : 27 ஜூன், 2016 at 4:16 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:06 PM

பாடல் 5

கூரிருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறை புனல் சடையில் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

கூரிருள் என்பதற்கு அகத்திருள் என்று பொருள் கொண்டு, அகத்திருள், புறத்திருள், உலகத்தினைச் சூழ்ந்துள்ள மாய இருள், ஆகியவற்றை ஒழிக்கும் திறமை வாய்ந்த பெருமான், தனது கழுத்தினில் நஞ்சினால் ஏற்பட்ட இருளினை உடையவராக இருக்கின்றார் என்று நயமாக இங்கே கூறப்படுகின்றது. இருளினைப் போக்கும் சந்திரனை சடையில் வைத்தவர் என்று கூறுவதன் மூலம் அப்பர் பிரான், சந்திரனுக்கு பெருமான் அருள் புரிந்து, அவன் அழியாமல் காத்து அவன் ஒளியுடன் வானில் உலவச் செய்தார் என்று நமக்கு உணர்த்துகின்றார். அனைத்து அண்டங்களிலும் நிறைந்து காணப்படும் மாயை இருள் என்பதால் ஆரிருள் என்று இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

அடர்ந்த இருளையும் கிழித்து விரட்டும் தன்மையில் ஒளி மிகுந்து காணப்படுவதும் கூர்மையானதும், பகைவர்களுக்கு கொடுமையானாதாகவும் உள்ள மழு ஆயுதத்தைத் தனது கையில் வைத்திருப்பவர் சிவபெருமான்; தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு வாழ்வளித்து அவன் முன் போல் வானில் திரிந்து இரவின் இருளைப் போக்கச் செய்தவர் சிவபெருமான்; கங்கை நதியைத் தனது சடையில் வைத்தவர் சிவபெருமான்; மாயையாகிய இருளுக்குள் அனைத்து உலகங்களையும் வைத்த பெருமான், அந்த மாயையிலிருந்து ஆன்மாக்கள் விடுபடும் வழியாக ஆறு வகையான சமயங்களையும் வைத்தவர் ஆவார். தான் உண்ட நஞ்சினை, ஊழிக்காலத்தில் தன்னுள்ளே ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நலன் கருதி, தனது கழுத்திலே தேக்கி வைத்தவர் சிவபெருமான்; இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.