ஜனவரி
1 ஃபிடே உலக ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியாவின் கோனெரு ஹம்பி சாம்பியன். பிளிட்ஸ் பிரிவில் வைஷாலிக்கு வெண்கலம்.
2 டி.குகேஷ் (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீண் குமார் (பாரா தடகளம்), மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோருக்கு தியான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிப்பு.
19 அறிமுக கோ கோ உலகக் கோப்பை போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன்.
25 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் சாம்பியன்.
25 பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு (ஹாக்கி) பத்ம பூஷண், ரவிச்சந்திரன் அஸ்வின் (கிரிக்கெட்), ஐ.எம். விஜயன் (கால்பந்து), ஹர்விந்தர் சிங் (வில் வித்தை), சத்யபால் சிங் (தடகளம்) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு.
26 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன்.
பிப்ரவரி
1 இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ.
2 யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்தியா சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்தது.
2 டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, சக இந்தியரான டி.குகேஷை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
மார்ச்
5 இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு.
8 உலக ஜூனியர் செஸ் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்.
9 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி, இந்தியா 3-ஆவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
15 மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் சாம்பியன் ஆனது.
20 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி தேர்வு.
ஏப்ரல்
6 உலகக் கோப்பை குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்தியராக ஹிதேஷ் சாதனை.
8 உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங்குக்கு தங்கம்.
12 ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தி (2-1) மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் வாகை சூடியது.
23 தேசிய ஃபெடரேஷன் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், மகளிருக்கான 400 மீட்டர் ஹர்டுல்ஸில் தங்கம் வென்றார்.
28 ஐபிஎல் போட்டியில் சதம் விளாசிய இளம் வீரராக (14 வயது) ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை.
மே
7 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு.
12 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு.
19 யு-19 தெற்காசிய கால்பந்து போட்டியில் வங்கதேசத்தை வென்று இந்தியா சாம்பியன்.
27 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவர் 10,000 மீட்டரில் இந்தியாவின் குல்வீர் சிங்குக்கு தங்கம்.
ஜூன்
3 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, 18 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன்.
7 பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் பட்டம் பெற்றார்.
8 பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன்.
14 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சாய்த்து, தென்னாப்பிரிக்கா சாம்பியன்.
15 அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் யு மும்பா கோப்பை வென்றது.
24 ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
26 ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், ஆடவர், மகளிர், கலப்பு என 3 பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது.
30 யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன்.
ஜூலை
1 ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷி பெளமிக் தங்கம் வென்றார்.
3 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசினார் (269).
6 டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் சாம்பியன்.
13 போலந்தின் இகா ஸ்வியாடெக் விம்பிள்டன் சாம்பியன் ஆனார்.
14 கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்ஸி வாகை சூடியது.
14 இத்தாலியின் யானிக் சின்னர் முதல் விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
20 உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டியில் இந்திய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் சாம்பியன்.
28 ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆனார்.
ஆகஸ்ட்
10 ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிலால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
11 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரிதிகாவுக்கு தங்கம்.
14 உலக டூர் தடகள போட்டியில், இந்தியாவின் அங்கித் தியானி, 2,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கம் வென்றார்.
24 இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.
25 பளுதூக்குதல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானுவுக்கு தங்கம்.
26 ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ராவுக்கு இரட்டைத் தங்கம்.
31 உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணைக்கு வெண்கலம்.
செப்டம்பர்
6 பெலாரஸின் அரினா சபலென்கா யுஎஸ் ஓபன் சாம்பியன்.
7 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.
7 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்.
8 யுஎஸ் ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்.
13 உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங்குக்கு தங்கம்.
14 குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீனாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றனர்.
15 கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.வைஷாலி சாம்பியன்.
17 உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆனந்த் குமார், கிரிஷ் சர்மாவுக்கு தங்கம்.
19 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்காலுக்கு வெண்கலம்.
28 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா 9-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் பாகிஸ்தானின் மோசின் நக்வியின் கையால் வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு. போட்டி நிர்வாகம் கோப்பையை திரும்ப எடுத்துச் சென்றது.
30 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து மூன்று முறை சாம்பியனாகி இந்திய ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் சாதனை.
அக்டோபர்
3 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானுக்கு வெள்ளிப் பதக்கம்.
5 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் எஸ்.எம். யுகன், தனிநபர், அணி, கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளிலுமே தங்கம் வென்று சாதனை.
10 கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெண்கலம்.
13 ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.
18 உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனையாக ஜோதி சுரேகா சாதனை.
24 ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில், கபடியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன்.
31 புரோ கபடி லீக் போட்டியில் தபங் டெல்லி கே.சி. சாம்பியன்.
நவம்பர்
1 இந்தியாவின் ரோஹன் போபண்ணா டென்னிஸிலிருந்து ஓய்வு.
2 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக சாம்பியனாகி வரலாறு படைத்தது.
9 டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன்.
10 தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் சாம்பியனான முதல் பெண் போட்டியாளராக அர்ஷி குப்தா (9) சாதனை.
17 ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸில், இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்தார்.
20 குத்துச்சண்டை உலகக் கோப்பை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்கள்.
21 ஆஷஸ் தொடரின் வரலாற்றில் 100 ஆண்டுகளில் முதல் முறையாக, பெர்த் டெஸ்ட்டில் ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்தன.
23 ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் சாம்பியன்.
23 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அறிமுக டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்.
24 மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன்.
26 இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை (408 ரன்கள்) தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்தது.
27 யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் சாம்பியன்.
30 ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் (52) அடித்த இந்தியராக விராட் கோலி சாதனை.
டிசம்பர்
6 உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்.
7 எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
10 ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜெர்மனி சாம்பியன். இந்தியாவுக்கு வெண்கலம்.
14 உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சாம்பியன்.
30 இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என முழுமையாக இந்திய மகளிர் அணி வென்றது. சொந்த மண்ணில் இந்தியா இவ்வாறு தொடரை முழுமையாக வென்றது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்தமாக இது 3-ஆவது முறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.