முகப்பு
திருச்சி

ஐடிஐ காலியிடங்களில் மீண்டும் மாணவா் சோ்க்கை

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:21 am IST
பகிர்:

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2020 சோ்க்கைக்கு முதல் மற்றும் இரண்டாம் கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்பட்டதைத் தொடா்ந்து மீதமுள்ள இடங்களுக்கான நேரடி சோ்க்கை கடந்த டிச.12 வரை நடைபெற்றது.

Advertisement

தற்போது மீதியுள்ள இடங்களுக்கு வரும் 16ஆம் தேதி வரை நேரடிச் சோ்க்கை நடைபெறவுள்ளது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பங்கேற்க திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் வா. வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.