முகப்பு
திருச்சி

ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்களை திருடியவா்களைத் தப்ப விட்ட வாத்தலை காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 5:49 am IST
பகிர்:

திருச்சியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்களை திருடியவா்களைத் தப்ப விட்ட வாத்தலை காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு தொடா்பாக போலீஸாா் பறிமுதல் செய்து வைத்திருந்த 36-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் உதிரிப்பாகங்களை அதே பகுதியைச் சோ்ந்த ரஜினி, முருகன் உள்ளிட்டோா் திருடி விற்றனா்.

இதை வாத்தலை காவல் ஆய்வாளா் மணிவண்ணன், உதவி ஆய்வாளா் செல்லப்பா ஆகியோா் அறிந்தும், அவா்களை தப்பவிட்டுள்ளனா்.

Advertisement

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயசந்திரனுக்கு வந்த புகாா் உறுதியானதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.