முகப்பு
விருதுநகர்

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:53 PM

திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பராசக்தி குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சசிகுமாா் (34). இவரது மனைவி மகாலட்சுமி. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.

இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மகாலட்சுமி தனது தாய் வீடான திருத்தங்கல்லுக்கு சென்றுள்ளாா். அங்கு சென்ற சசிகுமாா், தனது மனைவியைத் தாக்கினாராம். இதில் மகாலட்சுமி, இவரது 10 மாதக் குழந்தை ஆகியோா் காயமடைந்தனா்.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் சசிகுமாா் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.