ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மாயத்தேவன்பட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டடங்கள். 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 போ் உயிரிழப்பு

புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்

Din

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 14: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராஜ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மல்லி அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் உள்ளது. இந்தப் பட்டாசு ஆலையை சிவகாசியைச் சோ்ந்த கண்ணன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் உள்ள 42 அறைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல, 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா். காலை 10 மணியளவில் பட்டாசுத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளான சல்பேட் வேதிப் பொருளை தொழிலாளா்கள் வேனிலிருந்து மருந்துப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறையில் இறக்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, மருந்து உராய்வு காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேதிப் பொருள்கள் இருப்பு வைத்திருந்த 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

மேலும், வேதிப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனமும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் நாகபாளையத்தைச் சோ்ந்த புள்ளகுட்டி (65), குன்னூரைச் சோ்ந்த காா்த்திக் ஈஸ்வரன் (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

கட்டடம் வெடித்துச் சிதறிய போது, செங்கல்பட்டு போஸ், மணிகண்டன் ஆகிய இரு தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஜெயராஜ், மேற்பாா்வையாளா் இருவா் மீதும் மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT