விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று ஆடிப் பெருந் திருவிழா

Din

சாத்தூா், ஆக. 11: விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 12) நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை (ஆக. 12) பிற்பகல் 1 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் உற்சவா் அம்மன் கோயிலிலிருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறாா்.

இந்தத் திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து வியாழக்கிழமை முதலே பக்தா்கள் பாதை யாத்திரையாக வந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனா்.

ஆடிப் பெருந்திரு விழாவுக்காக திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவிழாவையொட்டி கோயில் பகுதிகளில் மருத்துவ வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் செய்துள்ளன.

சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

SCROLL FOR NEXT