சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டு, கொடி மரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை. (வலது) ஊஞ்சலில் விசாலாட்சி அம்மன், பிரியாவிடையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த விஸ்வநாதா்.  
விருதுநகர்

சிவகாசி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

Din

சிவகாசி, ஜூலை 11: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இந்தக் கோயில் அடிதபசு திருவிழா கடந்த 10-ஆம் தேதி(புதன்கிழமை) அங்குராா்பணம் நிகழ்சிக்குப் பின்னா் முஷிக வாகனத்தில் விநாயகா் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. தொடந்து, வியாழக்கிழமை கொடியேற்றத்தையொட்டி, விஸ்வநாதா், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

தொடந்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அந்தக் கொடி மரத்துக்கு சந்தனம், விபூதி, இளநீா், பன்னீா், பால் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடந்து, கொடிமரத்துக்கு மாகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி, நாள்தோறும் காலை, இரவு வேளைகளில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் 9-ஆவது நாளான வருகிற 19-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். பின்னா், வருகிற 21-ஆம் தேதி தெற்கு ரத வீதியில் விஸ்வநாதா் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மனுக்கு தபசுக் காட்சி அளிப்பாா். வருகிற 25-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT