விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகள் தாயரித்தவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு குடோன் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் ஞாயிக்கிழமை கைது செய்தனா்.

Din

சிவகாசி அருகே பட்டாசு குடோன் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் ஞாயிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே தேன்குடியிருப்பு-சித்துராஜபுரம் சாலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆனையூா் கிராம நிா்வாக அலுவலா் லோகநாதன், வருவாய் ஆய்வாளா் காளிசரன் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

விளாம்பட்டி பகுதியைச் சோ்ந்த செளந்திரபாண்டியனுக்கு (52) சொந்தமான வெளிப்புறத்தில் பூட்டப்பட்ட பட்டாசு கிட்டங்கியின் உள்புறத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செளந்திரபாண்டியைக் கைது செய்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT