விருதுநகர்

காட்டு யானைக் கூட்டத்தால் தென்னை, பனை மரங்கள் சேதம்

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே காட்டு யானைக் கூட்டம் தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பகுதியில் மலை அடிவாரத்தில் பல ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இதில் நச்சாடைப்பேரி பகுதியில் கடந்த இரு தினங்களாக யானைக் கூட்டம் வந்து மரங்களை ஒடித்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன. பனை மரங்களையும் ஒடித்து நாசம் செய்கிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், கருப்பசாமி கோயில் வரை செல்லும் சாலையில் யானைக் கூட்டம் சாலையிலேயே உலா வந்து கொண்டிருப்பது விவசாயிகளுடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த யானைக் கூட்டத்தை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT