விருதுநகர்

வீட்டில் நகை திருடிய பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அசோகன் மனைவி ஜெஸி ஜெய் கிறிஸ்டி(46). இவா், சிவகாசியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது வீட்டில் பீராவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது, இதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மனைவி இருளாயி (46) இந்த தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து, தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT